பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.01.22 - Padasalai.Org

No.1 Educational Website

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.01.22

 

 திருக்குறள் :
பால்:பொருட்பால்

இயல்: படையியல்

அதிகாரம்: படைமாட்சி

குறள் எண் : 765

குறள்:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை

பொருள்:
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

பழமொழி :

God helps those who help themselves


தனக்கு உதவுவோருக்கு உதவுவான் இறைவன்

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒவ்வொருவருக்குள்ளும் தனித் திறமை எனும் நெருப்பு உண்டு அதை எரிய வைப்பது அவரவரின் கடமை. 

2. மாணவ வாழ்க்கை ஒரு படிக்கட்டு போல அதில் ஏறுவதும் இறங்குவதும் அவரவர் திறமை

பொன்மொழி :


துன்பங்கள் வரும் போது அதை தைரியமாகவும் சாதுரியமாகவும் எதிர் கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். துன்பங்களை கண்டு துவண்டு விட கூடாது.அனைத்திலும் வெற்றி அடைவதற்கான ரகசியம் விடா முயற்சி.........ISRO சிவன்.

பொது அறிவு :


1. "வெளிநாடு வாழ் இந்தியர் தினம் " எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

 ஜனவரி 9.


 2. எந்த நாளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் " வீர் பால் தினமாக " அறிவித்துள்ளார்? 


 டிசம்பர் 26.

English words & meanings :


Fly - an insect with wings, ஈ. 

Fly - move through the air with the help of wings 

ஆரோக்ய வாழ்வு :


1.பனங்கிழங்கு சாப்பிடுவதினால் பித்தம்த நீங்கி உடல் பலம் பெறும். 2. கருவேப்பிலை தொடர்ந்து துவையல் செய்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

கணினி யுகம் :

Shift + F5 - Last modified segment. 

 Ctrl + End - Last segment 


ஜனவரி 12


தேசிய இளைஞர் நாள்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது


நீதிக்கதை


மாற்றம்

ஒரு நாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் என்று எழுதி இருந்தது.

நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க, நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியினுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது.

உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று எழுதியிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. 

நீதி :
நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்
I

இன்றைய செய்திகள்

12.12.21

★கரூரில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மற்றும் சிலைகள் மீட்பு.

★மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

★முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அதிக சிகிச்சை முறைகளுடன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான அரசாணை வெளியீடு.

★ராணுவத்தில் வீரர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அவர்களை அதிகாரிகள் நியாயமாக நடத்த வேண்டும் என்று ஆயுதப் படைகள் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

★10% கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதி; மாநிலங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை அறிவுரை.


★ஒமைக்ரான் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு என தனி தடுப்பூசி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மார்ச்சில் அது பயன்பாட்டுக்கு வருமென்றும் ஃபைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.


★பல்வேறு நாட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்குபெறும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நேற்று தொடங்கியது.

★புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி.

Today's Headlines

 ★  9th century inscriptions and statues are recovered at Karur.

 ★ The Chennai High Court has adjourned  the cases against the law which provides for 7.5 per cent reservation for government school students in admission to medical studies till February 15th .

 ★ Government Released GO to extend the Chief Minister's Comprehensive Medicare Plan for 5 years with more treatment options.

 ★ The Armed Forces Tribunal has advised that officers should be treated fairly in order to gain the confidence of soldiers in the military.

 ★ 10% of corona patients are admitted in hospital;  States must act with caution: Federal Department of Health adviced.


 ★ Pfizer says a separate vaccine is being developed to control the omega-3 virus and will be available in March.


 ★ Indian Open Badminton Tournament started yesterday with the participation of leading players from various countries.

 ★ Pro Kabaddi League: Tamil Talawas team won 3rd victory.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment