“23 சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் உடனுக்குடன் பெறலாம்” - பள்ளிக் கல்வித்துறை - Padasalai.Org

No.1 Educational Website

“23 சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் உடனுக்குடன் பெறலாம்” - பள்ளிக் கல்வித்துறை

  பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணையை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “2021-2022ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் மானியக்கோரிக்கையின் போது கல்வித்துறை அமைச்சரால் ஏனையவற்றுடன் வரிசை எண் 18-ல் மின்னணு சேவைகள் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறையில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளான நன்னடத்தைச் சான்று, ஆளறிசான்று, தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளும் அவர்தம் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு பொது சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு இயக்ககங்களின் வாயிலாக இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகல், புலப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate), கல்வி இணைச் சான்றிதழ் (Equivalence Certificate), தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் போன்ற பல்வேறு வகையானச் சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்று வருகின்றனர் என்றும், இச்சேவைகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வந்தாலும், மாணவர்கள். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே நேரில் சென்று பெற்றுவரும் நிலை இருந்து வருகிறது என்றும் இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு காலவிரையம் மற்றும் பணவிரையம் ஏற்படுவதுடன், அரசு அலுவலகங்களுக்கும் பணிச்சுமை கூடி வருகிறது. எனவே பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment