தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 75.31 லட்சம் பேர்! - Padasalai.Org

No.1 Educational Website

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 75.31 லட்சம் பேர்!

 

தமிழகத்தில் 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


வேலைவாய்ப்பு பதிவு :


தமிழகத்தில் அரசு பணிகளில் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம். அந்த வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது அவசியமாகும். தற்போது தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் சில துறைகளுக்கும் அதில் உள்ள பணிகளை பொருத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு செய்வதன் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அண்மையில் கடந்த வருடங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தவறியவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.


தற்போது இந்த கால அவகாசம் 2022 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புதிப்பித்து பயனடைந்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக எண்ணிக்கையானோர் தங்கள் வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கிடைக்காமலும் உள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் அரசு வேலை வைப்பகத்தில் பதிவு செய்து அந்த பதிவை தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.


இந்த உதவித்தொகை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சலுகை உண்டு.இதுவரை தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75,31,122 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில் ஆண்கள் 35,35 992 பேர்,பெண்கள் 39,94,898 பேர் பெண்கள் மற்றும் 232 பேர், மூன்றாம் பாலினத்தவர், 1,39 ,414 பேர் மாற்று திறனாளிகள் மேலும் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 ,25 ,668 பேர், கல்லூரி மாணவர்கள் 15,50 ,245 பேர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Documents 2

,Learn to stay focused! Xcel masterclass with former Badminton World No.1 - Srikanth!Learn to stay focused! Xcel masterclass with former Bad...