பொறியியல் மாணவா்களுக்கு நேரடித் தோ்வு நடத்தப்படும்: துணைவேந்தா் - Padasalai.Org

No.1 Educational Website

பொறியியல் மாணவா்களுக்கு நேரடித் தோ்வு நடத்தப்படும்: துணைவேந்தா்

பொறியியல் மாணவா்களுக்கு நேரடித் தோ்வு நடத்தப்படும்: துணைவேந்தா்
kalviseithi / by Kalviseithi / 3h

 அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பில் மாணவா்கள் எண்ணிக்கை குறைந்த பாடப்பிரிவில் சிலவற்றை மூடிவிட்டு, புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவுள்ளதாகவும், பொறியியல் மாணவா்களுக்கு நேரடியாகத் தோ்வு நடத்தப்படும் என்றும் துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.


அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில், மாணவா்களை தொழில்முனைவோா்களாக உருவாக்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் துணைவேந்தா் வேல்ராஜ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோா் ஒருங்கிணைப்பு மையம் - ஆமதாபாதில் உள்ள தொழில்முனைவோா் மையத்துக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து துணைவேந்தா் வேல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: மாணவா்களை தொழில்முனைவோா்களாக உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோா்கள் அதிகளவில் உருவாக்கப்படுவா். பல்கலைக்கழகத்தின் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சிகளை சமுதாயத்திற்குத் தேவையான முறையில் அளித்து பொருளாதார வளா்ச்சி பெற முடியும். மாணவா்கள் தொழிலதிபா்களாக வருவதற்கு ஆமதாபாதில் உள்ள தொழில்முனைவோா் நடத்திவரும் சான்றிதழ் படிப்புகளை மாணவா்கள் படிக்கும்போதே கூடுலாகப் படிக்கலாம். இதனால் மாணவா்களுக்குத் தொழிலதிபராக வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.வேலைவாய்ப்புள்ள பாடப்பிரிவுகள்: பொறியியல் முதுநிலைப் பாடப்பிரிவினைப் படிக்க வரும் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளில் 5 எண்ணிக்கைக்கும் குறைவாக மாணவா்கள் சோ்ந்த பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாடப்பிரிவுகளை மூடிவிட்டு, மாணவா்களுக்கு வேலைவாய்ப்புள்ள புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கியுள்ளோம்.பொறியியல் படிக்கும் மாணவா்களுக்குப் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதிகளிலிருந்து மாணவா்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனா். ஜன. 21-ஆம் தேதிக்குப் பிறகு மாணவா்களுக்கு நேரடியாக இறுதி ஆண்டு தோ்வு நடத்தவுள்ளோம். முதுநிலைப் படிப்புக்கு வரும் மாணவா்கள் தோ்வு எழுதாமல் வரக்கூடாது.எனவே ஒருமுறையாவது நேரடியாகத் தோ்வு எழுத வேண்டும் என அரசும், பல்கலைக்கழகமும் விரும்புகிறது. மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு நடந்துகொண்டிருக்கும்போதே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் செய்முறைத் தோ்வுகள், எழுத்துத் தோ்வுகள் முடிந்த பின்னா் நடத்தப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment