அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் - கூட்டுறவுத்துறை பதிவாளர் சங்கங்களுக்கு அறிவுறுத்தல் - Padasalai.Org

No.1 Educational Website

அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் - கூட்டுறவுத்துறை பதிவாளர் சங்கங்களுக்கு அறிவுறுத்தல்

 

.com/img/a/ 

அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை பதிவாளர் அருணா  சம்பந்தப்பட சங்கங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் அருணா அறிவுறுத்தியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணை பிறக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து வெளியிடப்பட்ட அரசாணையில் புதிய அடிப்படை ஊதியத்தில் 14% அகவிலைப்படி வழங்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து எவ்வித ஆணையும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. எனவே உயர்த்தி வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி குறித்த ஆணை அரசிடம் இருந்து பெற்று வழங்கப்படும் வரை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க தங்கள் மண்டலத்திலுள்ள சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.


No comments:

Post a Comment