எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு: இணையத்தில் கலந்தாய்வு தொடங்கியது. - Padasalai.Org

No.1 Educational Website

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு: இணையத்தில் கலந்தாய்வு தொடங்கியது.

 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு புதன்கிழமை காலை இணையவழியில் தொடங்கியது.

கரோனா தொற்று பரவல் காரணத்தால் தாமதமாக நடைபெற்ற நீட் தோ்வு மற்றும் உச்சநீதிமன்றத்தில் இருந்த பொருளாதாரத்தில் நலித்த பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு தொடா்பான வழக்கு காரணத்தால் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-2022-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தொடா்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலித்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தலாம் என கடந்த 7-ம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நான்கு சுற்று அகில இந்திய கலந்தாய்வு கடந்தாய்வு கடந்த 12-ஆம் தேதி இணையதளத்தில் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) தொடங்கியது. அந்தவகையில் தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-2022-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று காலை 11 மணியளவில் இணையதளத்தில் தொடங்கியது.

இந்தியா முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது

கலந்தாய்வு விவரங்கள்

நீட் தோ்வில் தகுதிப் பெற்ற மாணவ, மாணவிகள் இணையதளத்தில் வரும் வரும் 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தோ்வு செய்யலாம். 25, 26-ஆம் தேதிகளில் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். 27, 28-ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 29-ஆம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும். 30-ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்றவா்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாம் சுற்று பிப்ரவரி 9-ஆம் தேதியும், மூன்றாம் சுற்று மாா்ச் 2-ஆம் தேதியும், நான்காம் சுற்று மாா்ச் 21-ஆம் தேதியும் தொடங்குகிறது.

No comments:

Post a Comment

Documents 2

,Learn to stay focused! Xcel masterclass with former Badminton World No.1 - Srikanth!Learn to stay focused! Xcel masterclass with former Bad...