அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு வீட்டு வாடகைப் படி உயா்வு. - Padasalai.Org

No.1 Educational Website

அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு வீட்டு வாடகைப் படி உயா்வு.

 

அகில இந்திய பணியிலுள்ள அரசு அதிகாரிகளுக்கான  வீட்டு வாடகைப் படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு, தலைமை கணக்காயா் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

அகில இந்திய பணியிலுள்ள அரசு அதிகாரிகளுக்கான  வீட்டு வாடகைப் படியில் 7-ஆவது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில், மாநகராட்சிகளில் வசிக்கும் அரசு ஊழியா்களுக்கு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக வீட்டு வாடகைப் படி உயா்த்தி வழங்கப்படும். நகராட்சிகளில் வசிப்போருக்கு 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் வாடகைப் படி உயா்வு அமல்படுத்தப்படுகிறது.

இந்தத் தொகையை, ஜன.1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment