பள்ளிகளில் வழிகாட்டி மையங்கள் துவக்க நிதி ஒதுக்கீடு. - Padasalai.Org

No.1 Educational Website

பள்ளிகளில் வழிகாட்டி மையங்கள் துவக்க நிதி ஒதுக்கீடு.

 பள்ளிகளில் உயர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் ஆலோசனை மையம் அமைக்க, 3.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு முடித்ததும் மாணவர்கள், மேல்நிலை வகுப்பு, தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் தொழிற்கல்வியை தேர்வு செய்து, உயர் கல்வி கற்கின்றனர்.இவர்களுக்கான உயர் கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை, ஆசிரியர்கள், பெற்றோர் செய்கின்றனர். பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, மேல்நிலை வகுப்பில் எந்த பிரிவை தேர்வு செய்யலாம் என்பது குறித்து, புரிதல் இல்லாத நிலை உள்ளது.

மேல்நிலை வகுப்பு பாடங்களில், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் உள்ளன. எனினும், அரசுப் பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, கிராமப்புற மாணவர்களுக்கு, உயர் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு குறித்த புரிதலில் பெரிய இடைவெளி உள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள, 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழில் மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விபரங்களை வழங்க, வழிகாட்டும் ஆலோசனை மையம் அமைக்க, அரசு முடிவு செய்தது. 

இதை செயல்படுத்த நிதி ஒதுக்கும்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை பரிசீலனை செய்த அரசு, 3.08 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

No comments:

Post a Comment