சத்துணவு சாப்பிடும் பள்ளிக் குழந்தைகளுக்கு, உலர் உணவு பொருட்கள் வழங்க முதல்வர் உத்தரவு. - Padasalai.Org

No.1 Educational Website

சத்துணவு சாப்பிடும் பள்ளிக் குழந்தைகளுக்கு, உலர் உணவு பொருட்கள் வழங்க முதல்வர் உத்தரவு.

 

சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை, உலர் உணவு பொருட்கள் வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, சத்துணவு சாப்பிடும் பள்ளிக் குழந்தைகளுக்கு, உலர் உணவு பொருட்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் உட்பட அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் பணி, நேற்று முன்தினம் துவக்கப்பட்டது.

* தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, 1.100 கிலோ அரிசி, 594 கிராம் பருப்பு, 40 கிராம் கொண்டை கடலை அல்லது பாசி பருப்பு, 11 முட்டைகள்  நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு, 1.650 கிலோ அரிசி, 890 கிராம் பருப்பு, 40 கிராம் கொண்டை கடலை அல்லது பாசி பருப்பு, 11 முட்டைகள் 

* அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, இம்மாதம் 10ம் தேதி முதல், அவர்களின் வீடுகளுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள் நேரடியாக சென்று உலர் பொருட்களை வழங்குகின்றனர். அதேபோல, ஆறு மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும்; 11 வயது முதல் 14 வயது வரை உள்ள, பள்ளி செல்லா வளரிளம் பெண்கள்; கருவுற்ற பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில், சத்துமாவு உலர் உணவாக வழங்கப்படுகிறது.

ஏற்கனவே வழங்கப்பட்டதை விட, பள்ளி சத்துணவு பயனாளிகளுக்கு, தற்போது கூடுதலாக பருப்பு, முட்டை, கொண்டைக்கடலை வழங்கப்படுகிறது. இதனால், 42.13 லட்சம் பள்ளி மாணவர்கள் பயனடைவர். இந்த உலர் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களால் கண்காணிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment