உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் 8 பட்டதாரி பணியிடங்களை அனுமதிக்க வேண்டுதல் - TAMS கோரிக்கை! - Padasalai.Org

No.1 Educational Website

உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் 8 பட்டதாரி பணியிடங்களை அனுமதிக்க வேண்டுதல் - TAMS கோரிக்கை!

பெறுநர் 
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 
தலைமை செயலகம் 
சென்னை - 9

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு,

பொருள் : உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் 8 பட்டதாரி பணியிடங்களை அனுமதிக்க வேண்டுதல் - சார்பு.

வணக்கம். 
கடந்த 2011 திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை நிலை எண் 46 நாள் 1.3.2011 இன் படி தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை மூன்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆக மொத்தம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதிக்கலாம் என மேற்குறிப்பிட்ட அரசாணை கூறுகிறது ஆனால் இவ் விதிமுறைகளை கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித அரசாணையும் செயல்முறைகளும் வெளியிடாமல் தன்னிச்சையாக கைவிடப்பட்டு 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதாவது 6 முதல் 8 -ம் வகுப்பு வரை மூன்று பட்டதாரி ஆசிரியர்களும் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு இரண்டு பட்டதாரி ஆசிரியர்களும் மட்டுமே அனுமதிக்கும் நடைமுறை தற்போது வரை இருந்து வருகிறது. 5 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் பொழுது ஏதேனும் ஒரு ஆசிரியர் சிறு விடுப்பு அல்லது கல்வித் துறையால் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு செல்லும் பொழுது ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆசிரியர் இன்றி வகுப்புகள் நடைபெறும் அவல நிலை ஏற்படுகிறது மாணவர்களின் கற்றலும் பெரிதும் பாதிக்கப்படுகிறது இதனால் அரசு பள்ளிகளின் நன்மதிப்பு சிதைந்து தனியார் பள்ளி மோகம் அதிகரிக்கிறது இந் நடைமுறையினால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் கற்றலில் பின்தங்கும் நிலை ஏற்படும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்க கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை ) எண் 46 - ஐ மீண்டும் நடைமுறைப்படுத்தி ஒவ்வொரு உயர்நிலை பள்ளிகளுக்கும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கு.தியாகராஜன் 
மாநிலத் தலைவர் 
செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ ஜியோ 

நகல் :
மதிப்பிற்குரிய ஆணையர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை 

மதிப்பிற்குரிய முதன்மை செயலாளர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை 

மதிப்பிற்குரிய இணை இயக்குனர் அவர்கள் (பணியாளர் தொகுதி), பள்ளிக்கல்வித்துறை

No comments:

Post a Comment