ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - Padasalai.Org

No.1 Educational Website

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

 

 

பணி நிரந்தரம் கோரி, மூன்று நாட்களாக நடத்திய முற்றுகை போராட்டத்தை, பகுதி நேர ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்பு பாடங்களை நடத்தும் வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, 24ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை துவங்கினர்.

கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சங்க நிர்வாகிகளுடன், பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இன்று பேச்சு நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment