தள்ளி வைக்கப்பட்டுள்ள பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு உடனடியாக நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - Padasalai.Org

No.1 Educational Website

தள்ளி வைக்கப்பட்டுள்ள பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு உடனடியாக நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வி ஆணையாளர் அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கத்தினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் நலன் கருதி தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ள பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையினை மீண்டும் உடனடியாக வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களின் அதாவது இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்கள் உட்பட அனைவரின் மன உலைச்சலையும் போக்கிடுமாறும் எமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நீண்ட நாட்களாக தனக்கு மாறுதல் கிடைக்காதா என எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதியையும் மேலும் இதே போல நீண்ட நாட்களாக PG யாக தனக்கு பதவி உயர்வு கிடைக்காதா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் உடனடியாக முதுகலை ஆசிரியராக பதவி உயர்வுபெற முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதியையும், இதே போல பொது மாறுதலுக்காக காத்துக் கொண்டிருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான தேதியையும் உடனடியாக அறிவித்து உதவுமாறும் தங்களை பணிவுடன் வேண்டுகிறேன். மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ( இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் நீங்கலாக) பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதியை ஏற்கனவே அறிவித்து இருந்தீர்கள். ஆனால் தற்போது அந்த நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே உயர்கல்வியான B.A, B.Ed: B.Lit, B.Ed மற்றும் M.A, M.SC M.Com மற்றும் M.Phil: P.hd என பல பட்டங்களை முடித்து விட்டு பல ஆண்டுகளாக தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லையே என ஒரு வித ஏக்கத்தோடும், மிகுந்த மன உலைச்சலோடும் தினந்தோறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் அனைவருக்கும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்குரிய கலந்தாய்வு தேதியை தற்போது மீண்டும் அறிவிக்க உள்ள பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவனையில் (பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதியை) விடுபடாமல் உடனடியாக இவர்களும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறத்தக்க வகையில் புதிய அட்டவணையில் இடம்பெறும் வகையில் அனைத்து பாடத்திற்குமான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதியையும் விடுபடாமல் அறிவித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிடுமாறும், மேலும் அவர்களின் மன உலைச்சலையும், மன அழுத்தத்தையும் உடனடியாக போக்கிடுமாறும் எமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் தங்களை பணிவுடன் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றிங்க அய்யா, இவண், நல்லாசிரியர், ஆ. வ . அண்ணாமலை, மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், விழுப்புரம். கைபேசி எண் : 94436 19586

No comments:

Post a Comment