வேளாண் படிப்பு கவுன்சிலிங்; தற்காலிகமாக ஒத்திவைப்பு - Padasalai.Org

No.1 Educational Website

வேளாண் படிப்பு கவுன்சிலிங்; தற்காலிகமாக ஒத்திவைப்பு

 

 வேளாண் அறிவியல் பட்டப் படிப்புக்கான கவுன்சிலிங், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 12 வேளாண் அறிவியல் பட்டப் படிப்புகளில், 4,670 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.நடப்பு, 2021 - 22-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், செப்., 8 முதல் 'ஆன்லைன்' வாயிலாக பெறப்பட்டன. இதில், 40 ஆயிரத்து 585 மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். தரவரிசை பட்டியல், ஜன., 28ல் வெளியிடப்பட்டது. பிப்., 11 முதல் கவுன்சிலிங் நடக்க இருந்தது.

நிர்வாக காரணங்களால், கவுன்சிலிங் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 'கவுன்சிலிங் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என, பல்கலை டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்தார். விபரங்களுக்கு, பல்கலையை, 0422 - 6611210 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment