உதவி தொகை தேர்வு பள்ளிகளுக்கு எச்சரிக்கை - Padasalai.Org

No.1 Educational Website

உதவி தொகை தேர்வு பள்ளிகளுக்கு எச்சரிக்கை

 எட்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி உதவி தொகைக்கான, தேசிய வருவாய் வழி தேர்வுக்கு கட்டணத்தை செலுத்தாவிட்டால், 'ஹால் டிக்கெட்' கிடைக்காது என, தேர்வு துறை எச்சரித்துள்ளது.அரசு தேர்வு துறை இணை இயக்குனர் பொன்.குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வான என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு, பள்ளிகளில் இருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அந்த விபரங்களை, தேர்வுத் துறை உதவி இயக்குனர்கள் இணையதளத்தில் சரிபார்த்து கொள்ள வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தாதோர், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாது. எனவே, பள்ளிகள் தரப்பில் கட்டணம் செலுத்துவதை உறுதி செய்து, அதன் விபரத்தை தேர்வு துறை இணையதளத்தில், உதவி இயக்குனர்கள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment