பேராசிரியர் மாற்று பணி ஓராண்டு நீட்டிப்பு - Padasalai.Org

No.1 Educational Website

பேராசிரியர் மாற்று பணி ஓராண்டு நீட்டிப்பு

 அண்ணாமலை பல்கலையில் உபரியாக இருந்து, பிற பல்கலைகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களுக்கான மாற்று பணிக்காலம், மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலையின் நேரடி கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானவர்களை விட, அதிக பேராசிரியர்கள் பணியில் இருந்தனர். இவர்களுக்கான ஊதியம் வீணாவதை தடுக்கும் வகையில், வேறு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த பணிக்காலம் இந்த மாதம் முடிய இருந்த நிலையில், மாற்றுப் பணி காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த வகையில், 144 உதவி பேராசிரியர்கள், அண்ணா பல்கலை, பாரதிதாசன், மதுரை காமராஜ், பாரதியார் பல்கலைகள், பாலிடெக்னிக்குகளில் மாற்று பணிகளில் இன்னும் ஓர் ஆண்டுக்கு நீடிப்பர் என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment