திருக்குறள் :பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: தீ நட்பு
குறள் எண்: 821
குறள்:
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
பொருள்:
மனத்தால்
நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின்
நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத்
துணை செய்யும் பட்டடை போன்றது.
பழமொழி :
cracked bell can never sound well
உடைந்த சங்கு பரியாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்
2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
தாங்கக்கூடிய வலியை மட்டுமே படைத்தவன் கொடுப்பான் என்று எண்ணும் பக்குவப்பட்ட மனிதருக்கு ஆறுதல் தேவையில்லை.!”...... விவேகானந்தர்
பொது அறிவு :
1. உலகின் மிகப்பெரிய விமானம் எது?
மிரியா விமானம்.
2. உலக சமயநல்லிணக்க வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 1-7.
English words & meanings :
Rapid - very quick, அதி விரைவாக,
Hushed - very quiet, அமைதியாக
ஆரோக்ய வாழ்வு :
வாழைப்பூ
அல்சர் பிரச்சனைகளை சரிசெய்யும். மலச்சிக்கலைத் தீர்க்கும். மாதவிடாய்
பிரச்சினைகளை சரிசெய்யும். இரும்புச் சத்து இருப்பதனால் ரத்தசோகையை
குணமாக்கும். மக்னீசியம் இருப்பதனால், உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு
நல்லது.
கணினி யுகம் :
மார்ச் 04
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.[1] தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
பிறகு
1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில்
உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும்
இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.
தொழிலாளர்கள்
விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன்
மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற
விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம்
கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை
உனக்குள் ஒரு திறமை
துறவி
ஒருவரின் புகழ் நாடெங்கும் பரவியதைக் கண்ட மன்னர் ஒருவருக்கு பொறாமை
ஏற்பட்டது. தன் அமைச்சரிடம் எனக்கு சேவை செய்ய ஆயிரமாயிரம் பணியாளர்கள்
காத்துக் கிடக்கின்றனர். ஆனால் ஏதுமில்லாத துறவிக்கு கிடைக்கும் மரியாதை
எனக்கு இல்லை என்றால் எப்படி? எனக் கேட்டார்.
அமைச்சர்
மன்னரிடம் இன்றே நாம் துறவியை சந்தித்து அவரது புகழுக்கான காரணத்தை
அறிந்து கொள்வோமே என்றார். இருவரும் துறவியைச் சந்தித்தனர். சுவாமி என்
மனதில் ஒரு சந்தேகம் என வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினார் மன்னர். உடனே
துறவி மன்னா! வானில் பிரகாசிக்கிறதே... அது என்ன? என்று கை காட்டினார்.
நிலா என்றார் மன்னர்.
தென்றலில்
அசைந்தாடும் மலரைக் காட்டி இது என்ன என கேட்டார். ரோஜாப்பூ என்றார்
மன்னர். இந்த பூ எப்போதாவது நிலாவைப் பார்த்து அதைப்போல ஒளி வீசவில்லையே
என்று வருந்திருக்கிறதா? அல்லது நிலா மலர் போல மணம் வீசவில்லையே என
எண்ணியதுண்டா? யாரையும் யாரோடும் ஒப்பிடத் தேவையில்லை இயற்கையின் படைப்பில்
உயர்வு தாழ்வு இல்லை ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது.
உன்னைப்போல் என்னால் வாளெடுத்து என்னால் சண்டை போடமுடியாதே என்றார் துறவி.
மன்னருக்கு அறிவுக்கண் திறந்தது.
இன்றைய செய்திகள்
04.03.22
💥அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
💥 பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மார்ச் 5-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்.
💥
சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில்
சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெற செய்வதற்கான அறிவிக்கையை மத்திய
அரசு வெளியிட்டுள்ளது.
💥
கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா
பாதிக்கப்படும் என அச்சம் உள்ள நிலையில் கச்சா எண்ணெய் தோண்டி எடுக்கும்
இந்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக லாபம்
ஈட்டத் தொடங்கியுள்ளது.
💥
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் 360 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
கூறும் ஐபிசிசி, இனிவரும் காலத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட
பேரிடர்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது.
💥
உக்ரைன் உடனான போரில் க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என
தன்னிடம் உள்ள அதிநவீன மிக மோசமான நாசகர விளைவுகளை ஏற்படுத்தும்
ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
💥 ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; தமிழக வீரர் பாபா இந்திரஜித் சதம் அடித்து அசத்தல்.
💥 ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பையை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்.
Today's Headlines
💥 Reservation for Third Gender in Government Employment: Chennai High Court Order.
💥 Tamil Nadu Cabinet meets on March 5 to approve budget plans.
💥 The
Federal Government has issued a notification to include the detailed
report on road accidents and the verified cell phone number in the
insurance certificate.
💥 ONGC,
the state-owned crude oil company in India, has begun to make
unprecedented profits over the past eight years amid fears that high
imports of crude oil could hurt India.
💥 The
IPCC, which says 360 crore people have been affected by climate change,
has warned that more than one disaster could strike at the same time in
the near future.
💥 Russia
also appears to be planning to use cluster munitions and thermophilic
weapons in the war with Ukraine, which could have the most sophisticated
weapons of mass destruction.
💥 Ranji Trophy cricket; Tamil Nadu player Baba Indrajith scores a century.
💥 ISL Football: Kerala Blasters beat Mumbai.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment