பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.03.22 - Padasalai.Org

No.1 Educational Website

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.03.22

 

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: கூடா நட்பு

குறள் எண் :831

குறள் :
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்

பொருள்:
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்

பழமொழி :

Some are able because they think they.

உயர்வாக கருதினால் உயர்ந்திட முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனித்துவமே மகத்துவம் எனவே எப்போதும் என் தனித் தன்மையை இழக்க மாட்டேன் 

2. எனது ஒலி உரக்க ஒலிக்க செய்வேன் பிறரின் எதிரொலியாக இருக்க மாட்டேன்

பொன்மொழி :

உழைத்துக் கொண்டே இருங்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு வாழ்வில் சலிப்பே வராது.”____ கலாம் ஐயா

பொது அறிவு :

    1.உலக வன நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? 

மார்ச் 3. 

2. உலக நீர் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? 

மார்ச் 22.

English words & meanings :

Go the extra mile - try with extra effort, நோக்கம் நிறைவேற அதிக உழைப்பு. 

Hang in there - wait and be patient,பொறுமையாக காத்திருத்தல்

ஆரோக்ய வாழ்வு :

பசு மஞ்சள் இதய நோய் வராமல் தடுக்கும். பெண்களின் கர்ப்பப்பைக்கட்டிகள் கரைய உதவுகிறது. கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அல்சர், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.

கணினி யுகம் :

Ctrl + U - Change selected text to be underlined. 

Ctrl + F - Open find window for current document.

மார்ச் 10


சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.


நீதிக்கதை

பிடிவாதம் கொண்ட சிறுமி

ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள், அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள். 

ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா, அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள். 

அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள். 

கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள். 

கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டாள். 

அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க? என்று ஒரு சிறுமி பேசுவதை கேட்டாள். நீ தான், எல்லோரும் டூர் போறாங்க நானும் போகனும்னு சொன்னல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும் என்றார். 

அப்பா நான் டூர் போகலை. அடுத்தமுறை போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா என்றாள். அந்த சிறுமியின் அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். ஒரு பெரிய வீட்டுல வேலை இருக்குதாம், நான் வேலைக்குப்போறேன். அந்த பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சரியாக இருக்கும் என்றாள். 

ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கிறாள், அவள் அம்மாவும் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். இதை பார்த்த கீதா அவளின் தவறினை உணர்ந்தால் இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தால். 

கீதா வீட்டிற்கு வந்ததும், பெற்றோர் கீதா என்று அவர்கள் வாயெடுக்க, அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா என்ன அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கித்தாருங்கள் என்று கூறினாள். கீதா பேசியதைக்கேட்டு வியப்படைந்தனர் அவளது பெற்றோர். தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் கீதா. 

நீதி :
வீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

10.03.22

★கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 6 துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

★சென்னை: தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

★இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2,631 மாற்றுத் திறனாளிகள் பட்டம் பெற்று சாதனை: 3,257 பேர் சிறப்பு பிஎட் பட்டம் பெற்றுள்ளனர்.

★அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டம் நவீனத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறியுள்ளார்.

★கரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்திற்கு பின்பு, இரண்டு ஆண்டுகள் கழித்து மார்ச் 27-ம் தேதியிலிருந்து சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது.

★மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி, மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், நிர்வாகவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் உயர்கல்வி மையங்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதற்கான திருத்தங்களுடன் கூடிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது.

★"நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்காக இனி அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. உக்ரைனை ஏற்றுக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை" என உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

★ஐசிசி டெஸ்ட் தரவரிசை : ஆல்ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடம்.

★மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி.

★ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

 ★ The Directorate of Medical Education has given permission to start 6 ancillary medical courses at ESI Medical College, Coimbatore.

 ★ Chennai: Finance Minister Palanivel Thiagarajan will present the budget for the financial year 2022-23 in the Assembly on the 18th.

 ★ 2,631 Physically Challenged people got Graduated at Tamil Nadu Open University, the highest number in India, the greatest Achievement: 3,257 Special B. Ed

 ★ Minister of Higher Education K. Ponmudi has said that the curriculum of Anna University is to be redesigned in line with the development of the modern industry.

 ★ India resumes international flights on March 27, two years after the Corona epidemic and general lockdown 

 ★ According to the new education policy of the Central Government, the UGC has advised the higher education centers to adapt themselves to offer all courses including medicine, engineering, arts, and sciences in one place.  The UGC has issued a draft report with amendments to this effect.

 ★ Ukrainian President Vladimir Zhelensky has said that NATO is no longer pressuring it to join the NATO alliance.

 ★ ICC Test Rankings: Jadeja tops all-rounder list

 ★ Women's World Cup Cricket: West Indies beat England to win.

 ★ German Open Badminton: Saina Nehwal, Lakshaya Sen advance to next round.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment