பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.03.2022 - Padasalai.Org

No.1 Educational Website

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.03.2022

 

   

 திருக்குறள் :
அதிகாரம்:வெஃகாமை

திருக்குறள்:180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

விளக்கம்:

பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அவ்வாறு அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே வாழ்வில் வெற்றியைக் கொடுக்கும்‌.

பழமொழி :

Writing the word sugar will not be sweet.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனித்துவமே மகத்துவம் எனவே எப்போதும் என் தனித் தன்மையை இழக்க மாட்டேன் 

2. எனது ஒலி உரக்க ஒலிக்க செய்வேன் பிறரின் எதிரொலியாக இருக்க மாட்டேன்

பொன்மொழி :

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.”___ இறையன்பு இஆப

பொது அறிவு :

1.ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது? 

டேக்கோமீட்டர். 

2. உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு எது? 

நார்வே.

English words & meanings :

Hit the books - to study very hard, கடினமாக படித்தல் 

hit the nail - says exactly or correctly, மிக சரியாக கூறுவது

ஆரோக்ய வாழ்வு :

சின்ன வெங்காயம் மென்னு தின்று வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும். தும்மல், நீர்க்கடுப்பு, குணமாகும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து இதயம் பலமாகும். மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது.

கணினி யுகம் :

Ctrl + S - Save current document file. Ctrl + X - Cut selected item

நீதிக்கதை

அம்மா சொல் கேள்!

ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். 

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது. 

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. 

ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. 

சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. 

உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது. 

நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

இன்றைய செய்திகள்

11.03.22

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ம்தேதி பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம் நடைபெற இருப்பதாகவும், இக்கூட்டத்தில் 52 லட்சம்பெற்றோர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான சுகாதார சேவைகள் உரிமை சட்டம் கொண்டு வரப்படவுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

பேரிடர் காலங்களில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, பள்ளிபாடங்களின் காணொலிகள், வினா வங்கித் தொகுப்புகள் அடங்கிய சிறப்பு கல்விச் செயலியை பள்ளிக்கல்வித் துறை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், மாணவர்கள் உருவாக்கும் 75 செயற்கை கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

நிலவின் மேற்பரப்பில் ஆர்கான்-40வாயு இருப்பதை சந்திராயன்-2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர மாட்டேன்; ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்த தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க அறிவிப்பு.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: முதல் போட்டியில் இந்திய ஹாக்கி அணி கானாவுடன் மோதல்.

Today's Headlines

In all over Tamil Nadu, there will be meetings for SMC on March 20th. 52 lakh parents are expected to attend it.

To give equal medical attention to everyone soon there will be passing of the law on Rights to Health says Tamilnadu Health Minister.

During Disaster times soon TN government will release a Special Educational App so students can learn easily hence it contains all educational content such as videos and question banks.

To celebrate India's 75th Freedom day government is going to release 75 satellites all created by the students says Tamil Nadu Science and Technology club's vice president Mr. Mayilsamy Annadurai.

Chandrayan 2 discovered Argon - 40 gas on the surface of the Moon says ISRO.

I won't become a member of the NATO ready to talk with the Russian President declares Ukraine president publically.

In Commonwealth games, the Indian Hockey team play with Gana
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment