ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி - தொடர்ந்து 12 வாரங்கள் இப்பயிற்சி (12 கட்டகங்கள்) நடைபெறும் - Padasalai.Org

No.1 Educational Website

ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி - தொடர்ந்து 12 வாரங்கள் இப்பயிற்சி (12 கட்டகங்கள்) நடைபெறும்

 

TNTP இணைய தளத்தில் நடைபெறும் திறன் மேம்பாட்டு (capacity building) பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் (உடற் கல்வி, இசை, கலை மற்றும் பிற)  உட்பட அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். 

பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களில் முறையான காலமுறை ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டகத்தில் பயிற்சி நடைபெறும். அந்த வாரம் முழுவதும் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆசிரியர்கள் தங்கள்  user ID மற்றும் password பயன்படுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 

முதல் நாளான திங்கட்கிழமை கட்டகம் செயல்பட ( இணைப்பு பெற) சிறிது கால தாமதம் ஆகலாம். 

தொடர்ந்து 12 வாரங்கள் இப்பயிற்சி (12 கட்டகங்கள்) நடைபெறும். ஆசிரியர்கள் 12 கட்டகங்களில் பயிற்சியை முழுமையாக நிறைவு செய்த பின்னர் சான்றிதழ் generate ஆகும். அதன் நகலை தலைமை ஆசிரியர்களிடம் பிரதியெடுத்து வழங்க வேண்டும். 

 ஒவ்வொரு பள்ளியிலும் பங்கு பெறவுள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தொகை போன்ற விபரங்கள் அனைத்தும் விளக்கமாக அனைத்து அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

இப்பயிற்சி அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் முறையான காலமுறை ஊதியம் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கான பயிற்சி.

No comments:

Post a Comment