பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.03.22 - Padasalai.Org

No.1 Educational Website

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.03.22

 

   திருக்குறள் :

பால்: பொருட்பால் 

இயல்: நட்பியல் 

அதிகாரம்:கூடா நட்பு 

குறள் எண் :833 

குறள் : 

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் 
பேணாமை பேதை தொழில் 

பொருள்: 

வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்

பழமொழி :

A danger forseen is half avoided


 முன் அறிந்த ஆபத்து பாதி தவிர்த்தது போல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடினமாக மட்டும் அல்ல கவனமாகவும் உழைப்பேன் அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.

 2. மன நிறைவு வாழ்க்கையின் மந்திரக் கோல் எனவே எப்போதும் எல்லாவற்றிலும் மன நிறைவோடு இருப்பேன்

பொன்மொழி :

உழைப்பு, இது மட்டும் தான் உங்களை மற்றவர்களிடமிருந்து பளிச் என்று வேறுபடுத்திக் காட்டும்.”___

பொது அறிவு :

1." ஆசியாவின் வைரம் " என அழைக்கப்படும் நாடு எது? 

இலங்கை. 

2. பெண்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சியளிக்கும் நாடு எது? 

இஸ்ரேல்.

English words & meanings :

Sit on the fence - not taking sides, எப்பக்கமும் சாயாமல் நடுநிலை இருப்பது, 

you rock - you are great, நீங்கள் பெரிய ஆள்

ஆரோக்ய வாழ்வு :

மண்பானையில் சேமிக்கப்படும் நீரிலிருந்து கிடைக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம்முடைய உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைப் பராமரிக்க உதவுகிறது. இது உடலையும் குளிரூட்ட செய்யும் .இது உங்களுடைய உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மண் பானை நீரில் கனிமச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் அத

கணினி யுகம் :

Ctrl + B - Change selected text to be bold. 

Ctrl + I - Change selected text to be in italics.

மார்ச் 14


கார்ல் மார்க்சு அவர்களின் நினைவுநாள்


கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.

ஐரோம் சானு சர்மிளா 

ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்.

ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். 

நீதிக்கதை


பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாக உணவுக்காக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு இருந்தான். ஒரு பழைய கோணிப்பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப்போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின் முன்னே போய் நின்று வீடு மிகப் பெரியது, ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழப்பார்கள் என்று சொன்னான். 

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்! என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது. 

நான் உனக்கு தங்க நாணயங்கள் கொடுத்து உதவுகிறேன் என்றது தேவதை. பிச்சைக்காரன் உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகிவிடும் என்று சொல்லியது. பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை கோணிப்பை நிரம்பியதும் தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. 

உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே? என்றது அதிர்ஷ்ட தேவதை. போதாது. இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது என்றது. பிச்சைக்காரன் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றான். அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் கொடுத்தது. மறுவினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான். 

நீதி :
கிடைத்ததை வைத்து வாழவேண்டும். பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.

இன்றைய செய்திகள்

14.03.22

✔ மதுரை சவட்டாண் கண்மாயில் மீன்பிடி திருவிழா. போட்டி போட்டு மீன்பிடித்த மக்கள்.

✔ திருச்சியில் 700 கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த அரிய வகை பறவைகளை வனத்துறையினர் மீட்டனர்.

✔ திருப்பத்தூர் மலை பகுதியில் பரவும் காட்டுத்தீ. அணைக்க வனத்துறையினர் முயற்சி. 
மாணவர்கள் தங்கள் பெயரை தமிழ் முதலெழுத்துடன் எழுத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி துறை அறிவுறுத்தல்

✔ உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. ரொனால்டோ அதிக கோல் அடித்து கால்பந்து வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைத்துள்ளார்

✔ பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் எடுத்து வலுவான நிலையில் உள்ளது

Today's Headlines

 ✔ In Madurai Savattan Kanmay "Fishing Festival. People catch fish with competition. 

 ✔ Forest department rescues 700 exotic birds in Trichy

 ✔ Wildfires spreading in the Tirupattur hills.  Foresters try to turn it off.

 ✔ Department of Education instructed all educational institutions to train the students to write their name with Tamil initials

 ✔ Ronaldo is one of the greatest footballers in the world.  Ronaldo has created a new era in the history of football by scoring more goals

 Bangalore: India is in a stronger position to score more than 350 runs in the second innings of the day-night Test against Sri Lanka.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment