பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.03.22 - Padasalai.Org

No.1 Educational Website

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.03.22

 

   திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்:கூடா நட்பு

குறள் எண் :835 

குறள் :
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு

பொருள்:
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்

பழமொழி :

All’s well that ends well


நல்ல தொடக்கம் நல்ல முடிவைத்தரும்,

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடினமாக மட்டும் அல்ல கவனமாகவும் உழைப்பேன் அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.

 2. மன நிறைவு வாழ்க்கையின் மந்திரக் கோல் எனவே எப்போதும் எல்லாவற்றிலும் மன நிறைவோடு இருப்பேன்

பொன்மொழி :

இலட்சியம் என்று ஒன்று இல்லாவிட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்!”______பட்டுக்கோட்டையார்

பொது அறிவு :

1. விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு எது? 

நைட்ரஜன். 

2. கறையான் அரிக்காத மரம் எது? 

தேக்கு மரம்.

English words & meanings :

Cling - hold on tightly to, ஒன்றை உறுதியாக பற்றி கொள்ளுதல், 

refine - remove impurities, சுத்தப்படுத்துதல்

ஆரோக்ய வாழ்வு :

முடக்கத்தான் கீரை வாத நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது. தோல் நோய்களான சொறி ,சிரங்கு, போன்றவற்றிற்கு பற்று வைத்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். காது வலி, மூல வியாதிகள், மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவற்றை சரிசெய்யும்.மூட்டுவலிக்கு முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் வாதத் தன்மை கட்டுப்பட்டு மூட்டு வலியைப் போக்கும். தலைவலி, பொடுகு பிரச்சனைகளையும் சரிப்படுத்தும்.

கணினி யுகம் :

F1 - Universal help(for all programs) 

Shift + del - Cut selected item

மார்ச் 16


அழ. வள்ளியப்பாஅழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும்
பெற்றன.

நீதிக்கதை

கழுகின் நன்றியுணர்ச்சியும், நரியும்

ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி, தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார். 

இறக்கைகள் நன்கு வளர்ந்தது, பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது. 

இதைப் பார்த்த நரி, உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம், நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது. 

இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை, ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு. 

நீதி :
உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.

இன்றைய செய்திகள்

16.03.22

🌸நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆளுநர் உறுதி--தமிழக அரசு தகவல்.

🌸அலுவலக நேரத்தில் செல்போன் பயன்படுத்த நெறிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.

🌸ஹிஜாப் விவகாரத்தில் விதிக்கப்பட்ட தடை செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

🌸சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 3 கோடி மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டனர்.

🌸ஆசிய ஜூனியர் கைப்பந்து -- இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines

 🌸 Governor assures that NEET exemption bill will be sent to the President - Government of Tamil Nadu Information.

🌸 The High Court ordered that the protocols for cell phone use during office hours should be structured.

🌸 The High Court has ruled that the ban imposed on the hijab case will go through.

🌸 3 crore people have been brought under curfew in China as the spread of corona continues to increase.

🌸 Asian Junior Volleyball - Indian women's team won the title.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment