தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர கோரிக்கை! - Padasalai.Org

No.1 Educational Website

தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர கோரிக்கை!

 

 

தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர கோரிக்கை!


தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர வேண்டும் ..!!!
சபாநாயகர் அப்பாவு மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய அறிவிப்பு குறித்தான எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் எகிறியுள்ளது.


அதே சமயத்தில், கல்வித்துறையின் மானியக்கோரிக்கையின் போது, புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதும் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், கணினி ஆசிரியர்கள் நீண்ட வருட கோரிக்கையான தொடக்க கல்வியில் கணினி அறிவியல் பாடதிட்டத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும், அடிப்படை ஊதியத்தில் பி.எட் பயின்ற கணினி அறிவியல் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழக பட்ஜெட் 2022:

இதுகுறித்து பி.எட் கணினி அறிவியல் பயின்ற வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது, தனியார் பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைப்பதில்லை. இன்றைய கணினி உலகத்தில், அரசு பள்ளி மாணவர்கள் வேலை வாய்ப்பில் பின்தங்குகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு, முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்கள், கணினி அறிவியல் பாடத்திட்டத்தை அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தி அசத்தினார். அதன்பின் வந்த அதிமுக ஆட்சி கணினி அறிவியல் கல்வி திட்டத்தை முடக்கிவைத்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய கணினி கல்வி கிடைக்காமல் பள்ளி படிப்பை முடித்து வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேற்றக்கோரி, மத்திய, மாநில அரசுகளிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அரசுகள் எங்கள் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணிக்கிறது

கணினி ஆசிரியர்கள்

திமுக ஆட்சி 2021ல் ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகும் கூட, கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு நிலைகளில் பல முறை மனு அளிக்கப்பட்டு, 1100 தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை தெரிவித்து வந்தோம். ஆனால், எந்த முன்னேற்றம் இல்லை.முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்த போது, அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கோரிக்கையின் தன்மையை என்னவென்று புரிந்து கொள்ளாமல், அதனை உயர் அதிகாரிகள் வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், மாறாக, மாவட்ட முதன்மை கல்வி கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.முதன்மை கல்வி அலுவலர்களும், இது மாநில அரசின் கொள்கை முடிவு என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கின்றனர். அடிப்படை புாிதல் இல்லாமல், முதல்வர் தனிப்பிரிவில் இதுபோன்று அதிகாரிகள் பணியாற்றுவது எந்தவொரு மக்கள் பிரச்னைக்கும் தீர்வு அளிக்காது. பள்ளி கல்வி அமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது, அவர் இந்த விஷயத்தில் அமைதி காப்பது, அரசின் கொள்கை முடிவு என்னதான் என்று கேள்வி கேட்க தோன்றுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் நலன் கருதி தொடக்க கல்வியில் கணினி கல்வி அறிமுகம் செய்ய வேண்டும், இது சார்ந்து இருக்கும் கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும். இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பாக வெளியிட்டு, அதனை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.திரு வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.


No comments:

Post a Comment

Documents 2

,Learn to stay focused! Xcel masterclass with former Badminton World No.1 - Srikanth!Learn to stay focused! Xcel masterclass with former Bad...