பள்ளிகளில் கூட்டு வழிபாடு, விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை - Padasalai.Org

No.1 Educational Website

பள்ளிகளில் கூட்டு வழிபாடு, விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

 

கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளிகளில் கூட்டு வழிபாடு, விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அந்த கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பரவலுக்குப் பிறகு தற்போது மாணவா்கள் முழு அளவில் பள்ளிக்கு வருகை தருகின்றனா். இதை கருத்தில் கொண்டு மாணவா்களுக்கு நற்சிந்தனைகளைப் போதிக்கும் வகையில் கூட்டு வழிபாடு, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் , கொடிப்பாடல் , ஒருமைப்பாடு உறுதிமொழி ஆகியவை வழக்கம்போல் நடைபெற தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

மேலும் பள்ளி மாணவா்கள் பல்வேறு விளையாட்டுகளில் சாதிக்கும் வகையில் தொடா் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். அவா்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை பள்ளிகள் அளவிலும் குறுவட்டம் , மாவட்டம் மாநில அளவில் நடத்தவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

.com/img/a/

No comments:

Post a Comment