பெண்கள் முன்னேற்றம்: ஐ.ஐ.டி., திட்டம் - Padasalai.Org

No.1 Educational Website

பெண்கள் முன்னேற்றம்: ஐ.ஐ.டி., திட்டம்

  சென்னை: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பெண்களை முன்னேற்றும், மத்திய அரசின் திட்டத்தில், சென்னை ஐ.ஐ.டி.,யும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், பெண்களை அறிவியல், தொழில்நுட்ப இன்ஜினியரிங் மற்றும் கணித துறையில் முன்னேற்றுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பாலின ரீதியாக, பெண்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் அளிக்கும் திட்டங்கள், பிரிட்டிஷ் கல்வி அமைப்புகளுடன் இணைந்து, மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை மேற்கொள்ள உள்ளது.

பெண்களை பல்வேறு வகைகளில் தலைவர்களாக உருவாக்குதல்; பெண் ஊழியர்களுக்கு, அவர்களின் பணிகளில் பதவி உயர்வு பெறும் வழிகாட்டுதல் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், பெண் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தல்; சர்வதேச அளவில் கற்பித்தல் பணியில் ஈடுபட, பெண் பேராசிரியர்களை அதிகரித்தல் போன்ற திட்டங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment