பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி! - Padasalai.Org

No.1 Educational Website

பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி!

 

பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் பெருத்த குளறுபடி என பட்டதாரி ஆசிரியர்கள் வேதனை! 

.com/img/a/

நேற்று முதல் இன்று தற்போது வரை நடந்து வரும் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் ( DSE)  கலந்தாய்வில் முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் முன்னுரிமை இல்லாத பலருக்கு தற்போது முன்னுரிமை என்று இன்று வந்திருக்கிறது... உதாரணமாக ஆங்கில பாடத்தில் 10180708 எண் கொண்ட ஒரு ஆசிரியருக்கும் இன்னும் சில ஆண் ஆசிரியர்களுக்கும் இறுதிப் பட்டியல் என்று ஒன்று வெளிவந்த போது முன்னுரிமை எதுவும் இல்லை என்று இருந்தது ஆனால் இன்று வந்த பட்டியலில் அந்த ஆண் ஆசிரியருக்கு இராணுவத்தில் பணிபுரிபவர் மனைவி என்று முன்னுரிமை வந்துள்ளது...

இது அதிக அளவிலான குளறுபடி ஏற்படுத்தும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment