'நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்': பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் - Padasalai.Org

No.1 Educational Website

'நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்': பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

 

நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜனுடன் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

தி.மு.க தேர்தல் அறிக்கையிலும், இது குறிப்பிட்டிருந்தது. நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹைடெக் லேப் மூலமாக நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பள்ளிக்கூடங்களில் பாலியல் தொல்லை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment