இணைய விளையாட்டுகளுக்கு ஓய்வுகொடுப்போம்! - விளையாட்டுப் பொருள்களுக்கு உயிர்கொடுப்போம்! - Padasalai.Org

No.1 Educational Website

இணைய விளையாட்டுகளுக்கு ஓய்வுகொடுப்போம்! - விளையாட்டுப் பொருள்களுக்கு உயிர்கொடுப்போம்!

  

இணைய விளை­யாட்­டு­களை சற்று ஒதுக்­கி­விட்டு, நம் பிள்­ளை­கள் விளை­யாட்­டுப் பொருள்­களை பயன்­ப­டுத்த ஊக்­கு­விப்­போம்.

பள்­ளிப் பாடங்­கள் தொடங்கி இரண்டு மாதங்­கள்­தான் ஆகி­யுள்­ளன. எனவே, மாண­வர்­க­ளுக்கு அவ்­வ­ளவு வீட்­டுப்­பா­ட­மும் திட்­ட­வே­லை­யும் செய்ய வேண்­டிய கட்­டா­யம் இருக்­காது. பள்ளி முடிந்­த­வு­டன் பிள்­ளை­கள் தங்­கள் விளை­யாட்டு நேரத்தை தொடங்க ஆர்­வ­மாக வீடு திரும்­பு­கின்­ற­னர்.

ஆனால், பெரும்­பா­லும் இப்­பிள்­ளை­கள் இணைய விளை­யாட்­டு­க­ளையே விரும்புகின்றனர்.

“இது­போன்ற பழக்­க­வ­ழக்­கங்­கள் வருந்­த­த்தக்­க­தாக இருக்­க­லாம். குடும்ப உறுப்­பி­னர்­கள் ஒரு­வரை ஒரு­வர் பார்க்­கும் நாட்­களில் கூட பிள்­ளை­கள் தங்­கள் இயந்­தி­ரக் கரு­வி­களை மும்­மு­ர­மாக பயன்­படுத்தி விளை­யா­டிக்­கொண்­டி­ருப்­பார்­கள்,” என்று வருத்­தப்பட்டார் கொங் வா பள்ளி ஆசி­ரி­யர் திரு­வாட்டி ஷரிஃபா வர்டா.

இன்­றைய தொடக்­கப் பள்ளி மாண­வர்­கள் விளை­யாட்டுப் பொருள்­க­ளைக் கொண்டு விளை­யா­டு­வ­தில் ஈடு­பாடு காட்­டு­வ­தில்லை.

தமது சிறு வய­தில் ‘ஃபோம் ஃபிக்ஸ் இட் ப்லேன்ஸ்’ கொண்டு விளை­யா­டி­னார் திரு­வாட்டி ஷரிஃபா. அது தமது கற்­ப­னைத்­தி­றனை வளர்த்­த­தாகக் கூறுகிறார். சிறு­வர்­கள் ஒன்­று­சேர்ந்து விளை­யாட்டுப் பொருள்­களைக் கொண்டு விளை­யா­டும்­போ­தும் பலகை விளை­யாட்­டு­களை விளை­யா­டும்­போ­தும் குழு­வாக விளை­யாட வாய்ப்புக் கிடைக்கிறது, அத்துடன் அவர்­க­ளு­டைய புத்­தாக்­கத்­தி­ற­னும் வளர்­கிறது.

ஒரு சிலர், இணைய விளை­யாட்­டு­க­ளின் வாயி­லா­க­வும் மேற்­கு­றிப்­பிட்ட திறன்­களை வளர்த்­துக்­கொள்­ள­லாம் என்று கூறி­னா­லும், வல்­லு­நர்­களோ, விளை­யாட்டு பொருட்­க­ளைக் கொண்டு இன்­னும் அதி­க­மா­கவே கற்க வாய்ப்­பு­கள் உள்­ளன எனக் கூறு­கி­றார்­கள்.

விளை­யாட்டுப் பொருள்­க­ளைக் கொண்டு விளை­யா­டும் பிள்­ளை­கள் இன்­னும் சுறு­சு­றுப்­பாக இருப்­பார்­கள் என்­றும் திரை­களைப் பார்த்­துக்­கொண்டே இருக்க மாட்­டார்­கள் என்­றும் சொன்­னார், ஆங்­கர் கிரீன் தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர் கொர்­டன் சுவா கூன் லெங்.

ஆனால், தங்­கள் விரல்­க­ளைக் கொண்டு இயந்­தி­ரக் கரு­வி­களை பயன்படுத்தி விளை­யா­டும் சிறு­வர்­க­ளுக்குக் குறைந்த அள­வில்­தான் பயன் உள்­ளது என்­றார் புக்­கிட் பாஞ்­சாங் தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர் திரு­மதி ஃபில்லிஸ் லிம்.

சமமான நேரத்தை

ஒதுக்கிக் கொடுங்கள்

கொவிட்-19 பர­வும் காலக்­கட்­டத்­தில் பிள்­ளை­க­ளி­டையே இணைய விளை­யாட்­டு­கள் சூடு­பி­டித்­தா­லும், விளை­யாட்­டுப் பொருள்­களைத் தொடர்ந்து பயன்­படுத்த வேண்­டும்.

இணைய விளை­யாட்­டு, விளை­யாட்டுப் பொருள்­களுடனான விளையாட்டு ஆகிய இரண்டுக்கும் சம­மான நேரத்தை ஒதுக்குவதற்கு பெற்­றோர்­ தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு உத­வ­லாம்.

பிள்­ளை­க­ளுக்கு பெற்­றோர்­ முத­லில் ஓர் அமை­தி­யான, சுத்­த­மான இடத்தைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும். பின்­னர், அங்கு என்ன செய்ய விரும்­பு­கி­றார்­கள், பிள்ளைகள் எவ்­வித விளை­யாட்டுப் பொருளை எடுத்து விளை­யாட விரும்­பு­கி­றார்­கள் என்­றும் கேட்­டுக்­கொள்­ள­லாம். மேலும், பெற்­றோர்­ தங்­கள் பிள்­ளை­க­ளோடு ஒன்­று­சேர்ந்து விளை­யாட ஆர்­வம் காட்ட வேண்­டும். அதே நேரத்­தில், பிள்­ளை­களி­டம் சில சம­யங்­களில் கேள்வி கேட்க வேண்­டும். பெற்றோர் தமது சொந்தக் கருத்­து­க­ளை­யும் பிள்­ளை­க­ளோடு பகிர்ந்­து­கொள்ள வேண்­டும்.

கரு­வி­களைப் பயன்­படுத்­தும் நேரத்தைக் குறைத்­துக்­கொள்­வ­தோடு, தின­மும் விளை­யாட்டுப் பொருள்­க­ளைக் கொண்டு விளை­யா­டும் பழக்­கத்தை பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு அறி­மு­கப்­படுத்­த­லாம். அது­மட்­டு­மல்­லா­மல், ஒரு சில நாட்­களில் மற்ற பிள்­ளை­க­ளை­யும் வீட்­டுக்கு அழைத்து விளை­யாட ஊக்­கு­விக்­க­லாம்.

இதன் மூலம், பிள்­ளை­க­ளி­டையே புது நட்­பு­கள் உரு­வாகி நீண்ட காலம் நீடிக்­க­லாம்.

பெற்­றோர்­ தங்­கள் பிள்­ளை­க­ளோடு விளை­யா­டும்­போது நல்ல உதா­ர­ண­மாகத் திகழ, தங்­கள் கைத்­தொ­லை­பே­சி­க­ளை­யும் மற்ற இயந்­தி­ரக் கரு­வி­க­ளை­யும் பயன்­படுத்­தா­ம­லி­ருக்க முயற்­சி செய்ய வேண்­டும். பிள்­ளை­கள் மீது முழு கவ­னத்­தை­யும் செலுத்­தி­னால் அவர்­களும் மகிழ்ச்­சி­யாக விளை­யா­டு­வார்­கள்.

ஆசி­ரி­யர்­கள் பரிந்­து­ரைக்­கும் விளை­யாட்­டுப் பொருட்­கள்

தொடக்­கப்­பள்ளி ஒன்று முதல் மூன்­றாம் வகுப்பு மாண­வர்­கள், தங்­கள் உடலை அசைய வைக்­கும் விளை­யாட்டுப் பொருள்­க­ளைக் கொண்டு விளை­யா­ட­லாம். மேலும், மன­நல மற்­றும் சமூ­க­நல வளர்ச்­சியை ஊக்­கு­விக்­கும் விளை­யாட்டுப் பொருள்­க­ளைக் கொண்­டும் விளை­யா­ட­லாம். உதா­ர­ணத்­திற்கு, ‘புஷ் அண்ட் புல்’ விளை­யாட்டுப் பொருள்­கள், ‘ரைட்-ஒன்’ விளை­யாட்டுப் பொருள்­கள், ‘பில்­டிங்க் பிளாக்ஸ்’, அமைப்பு உரு­வாக்­கும் விளை­யாட்டுப் பொருள்­கள் போன்­ற­வற்றை பிள்­ளை­க­ளுக்கு வாங்­க­லாம்.

தொடக்­க நிலை நான்கு முதல் ஆறாம் வகுப்பு மாண­வர்­கள் ‘மாடல்ஸ்’ மற்­றும் ‘டென்­கி­ராம்ஸ்’ போன்ற சவால்­களைச் சமா­ளிக்க கற்­றுத்­த­ரும் விளை­யாட்டுப் பொருள்­க­ளைக் கொண்டு விளை­யா­ட­லாம். அறி­வுக்­கூர்­மை­யை­யும் சிந்­த­னைத்­தி­ற­னை­யும் தூண்­டும் விளை­யாட்டுப் பொருள்­க­ளைப் பிள்­ளை­க­ளுக்­குக் கொடுப்­பது நல்­லது. லெகோ, பிளாக்ஸ், தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்கு மிக­வும் தகுந்த விளை­யாட்டுப் பொருள்களாக அமை­கின்­றன.

அவற்­றைக் கொண்டு பிள்­ளை­கள் உரு­வாக்­கும் வடி­வங்­களும் அவர்களின் புத்­தாக்­கத்­தை­யும் சிந்­த­னை­த் திறனையும் பிர­தி­பலிக்­கும். இறு­தி­யாக, கணி­தம் மற்­றும் அறி­வி­யல் அறிவூட்டும் விளை­யாட்டுப் பொருள்­கள் பிள்­ளை­கள் பள்­ளி­யில் கற்ற பாடங்­க­ளைப் புரி­ய­வைக்க உத­வு­கின்­றன.

No comments:

Post a Comment