பள்ளிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Padasalai.Org

No.1 Educational Website

பள்ளிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 'அரசு பள்ளிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என, முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் இடைநிலை கல்வி பிரிவு இணை இயக்குனர் கோபிதாஸ் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை, சமூக விரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கும், சமூக விரோதிகள் குந்தகம் விளைவிக்கின்றனர். எனவே, அரசு பள்ளி இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்து, அதை அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment