கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களைக் காக்க சனிக்கிழமை வேலைநாள் என்பது உடனே ரத்து செய்ய வேண்டும் - .தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை! - Padasalai.Org

No.1 Educational Website

கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களைக் காக்க சனிக்கிழமை வேலைநாள் என்பது உடனே ரத்து செய்ய வேண்டும் - .தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை!

  கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களைக் காக்க சனிக்கிழமை வேலைநாள் என்பது உடனே ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

கொரோனா என்னும் பெருந்தொற்று முடிந்து அனைத்துவகைப் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகளில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக பள்ளிகள் வாரத்திற்கு ஆறு நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு தொடர்ந்து அவ்வாறே இயங்கி வருகின்றன. 

எதிர்பாராமல் வந்த கொரோனாவைப்போல, கோடைகாலமும் வழக்கத்திற்கு மாறாக மிகமுன்கூட்டியே வந்ததுடன், அதிகபட்ச வெப்பநிலையை சராசரியாக தந்துகொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து,
பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இந்த மாற்றம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, 
தோல் நோய்கள் என பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. 


ஒரே இடத்தில் 
பகற்பொழுதில்
அதிக நேரம் கூட்டமாக இருக்கும்
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட ஆரம்பித்துள்ளன. பள்ளிகள் அனைத்திலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படிதான் பாடங்கள் நடத்தப்படுகின்றன. பாடங்களின் பெரும்பாலான பகுதிகள் முடிக்கப்பட்டுவிட்டன. எனவே தமிழக அரசு இந்நிலையை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள சனிக்கிழமை பள்ளி வேலைநாள் என்னும் உத்தரவை இரத்து செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன். 

அருகில் உள்ள சில மாநிலங்கள் பள்ளி நேரத்தை காலை 7.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு நிறைவுபெறும் வகையில் உத்தரவை இட்டு கோடைகாலத்தில் மாணவச்செல்வங்கள் பாதிக்காவண்ணம் முடிவெடுத்து செயல்படுத்திவரும் நிலையில் நமது தமிழகத்தில் சனிக்கிழமை வேலைநாள் என்பதை ரத்துசெய்து அறிவிப்பது சரியான ஒன்றாகவே இருக்கும்.

மேலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நாட்களில் பள்ளிகளைத் தொடந்து நடத்தாமல்,
போதிய குடிநீர் வசதி,
கழிப்பறை வசதி போன்ற கட்டமைப்பில் முன்னேற்றம் காண வேண்டிய சூழலில்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதியிலேயே தேர்வுகள் நடத்தி, வழக்கம்போல் கோடை விடுமுறையை 
மே மாதம் முதல் தொடங்கிடவும் வழிவகை செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன்.



சிகரம்சதிஷ்
நிறுவனர்- 
கல்வியாளர்கள் சங்கமம்

No comments:

Post a Comment