டிப்ளமோ வேளாண் படிப்புகளுக்கான இணைய வழிக்கலந்தாய்வு இன்று முதல் துவங்கம். - Padasalai.Org

No.1 Educational Website

டிப்ளமோ வேளாண் படிப்புகளுக்கான இணைய வழிக்கலந்தாய்வு இன்று முதல் துவங்கம்.

 டிப்ளமோ வேளாண் படிப்புகளுக்கான இணைய வழிக்கலந்தாய்வு இன்று முதல் துவங்க உள்ளது என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.

பல்கலை 'டீன்' கல்யாணசுந்தரம் கூறியதாவது: பல்கலையில், 2021-22ம் கல்வியாண்டுக்கான டிப்ளமோ வேளாண் படிப்புக்கு இணைய வழிக்கலந்தாய்வு இன்று துவங்கி வரும், 9ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களின், மொபைல்போன், இ-மெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இணையதள கலந்தாய்வின் போது கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள், tnau.ucanapply.com வாயிலாக உள்நுழைந்து, இன்று முதல் வரும் 9ம் தேதி மாலை 5:00 மணி வரை கல்லுாரி, பாட விருப்பங்களை மாற்றிக் கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment